Marunthugalal Varum Noigal ( மருந்துகளால் வரும் நோய்கள் ) By Dr Fazlur Rahman
Marunthugalal Varum Noigal ( மருந்துகளால் வரும் நோய்கள் ) By Dr Fazlur Rahmanமருந்துகளால் வரும் நோய்..
- Rs.199.00Rs.205.00
- Product Code:PalikaShop1106
- Availability:In Stock
Tags: Marunthugalal Varum Noigal, Marunthugalal Varum Noigal book, Dr Fazlur Rahman, Dr Fazlur Rahman books
Marunthugalal Varum Noigal ( மருந்துகளால் வரும் நோய்கள் ) By Dr Fazlur Rahman
மருந்துகளால் வரும் நோய்கள் என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் எவ்வளவு கடுமையான வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆங்கில மருத்துவத்தை விட்டும், இன்னும் மற்ற எந்த மருத்துவத்தை விட்டும் உறுதியாக விலகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அவர்கள் தங்களுடைய நன்மையான எதிர்காலத்தை புத்துணர்வோடு தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் எந்தவொரு நோயையும் எதிர்த்து அழிக்கக் கூடிய தத்தம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டிற்கு பொறுமையைக் கொண்டு பக்கபலமாக இருப்பார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான நோய்கள் தங்கள் குடும்பத்தை விட்டே பெருமளவு நீங்கி மருத்துவச் செலவு ஒன்றே தங்கள் குடும்ப அங்கத்தினர்களை நெருங்காதவாறு பாதுகாத்துக் கொள்வார்கள். நிச்சயமாக இவர்கள் வெற்றியாளர்கள்.
மருந்துகளால் என்னென்ன கேடுகள் இருக்கின்றன என்பதை ஆங்கில மருத்துவம் மக்களிடமிருந்து நயவஞ்சகத்தனமாக இன்று வரை மறைத்து வந்ததை எந்த ஒளிவு மறைவுமின்றி எழுதப்பட்டிருப்பதை நீங்கள் படிக்கும் பொழுது,அந்தக் கணமே இந்த மருந்துகள் என்ற வி~ங்களை சாப்பிடுவதைக் காட்டிலும், அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகுவது ஒன்றே ஒரே வழி என்பதை உணர்வார்கள். ஏனெனில், அவர்கள் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்திற்கும் நோய்கள் காரணமே அல்ல. எந்த நோய்க்காக ஆங்கில மருத்துவர்களால் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த மருந்துகளே ஒட்டுமொத்தமான காரணம் என்பதை அறிவதனாலேயாகும்