web
counter

Intha Vinadi book (இந்த விநாடி) By Nagore rumi

rating

Intha Vinadi book (இந்த விநாடி) By Nagore rumiசிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள்? அதற்கு வழி தெரியாம..

  • Rs.150.00Rs.155.00

  • Product Code:PalikaShop794
  • Availability:In Stock

Tags: Intha Vinadi, Nagore rumi, Nagore rumi books

Intha Vinadi book (இந்த விநாடி) By Nagore rumi

சிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள்? அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ இந்த விநாடி உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றி - சந்தோஷம் இந்த இரண்டு வார்த்தைகளில் எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் அடக்கி விடலாம். வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும்விட தலைசிறந்த வழி நீங்கள் யாரெனத் தெரிந்துகொள்வதுதான். எனவே உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல உண்மைகளை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும். 1980களில் எழுதத் தொடங்கிய நாகூர் ரூமி இதுவரை 45 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, மதம், ஆன்மிகம், தியாகம் என பல தளங்களில் இவர் இயங்குபவர். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது. இவரது இலியட் காவிய தமிழாக்கம் நல்லி - திசையெட்டும் விருதினைப் பெற்றது. இந்த விநாடி இவரது மிக சமீபத்திய படைப்பு.

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர்.இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good